Jump to content


Photo

சமையல் : இனி இதை தூக்கி எறியாம... இப்படி ட்ரைப் பண்ணுங்க !

Cookie Cook Cooking

  • This topic is locked This topic is locked
7 replies to this topic

#1 🅃.🅼.🅸.🅽.🅴.🅁

🅃.🅼.🅸.🅽.🅴.🅁

    m.i.n.e

  • Team Rockers
  • 2,415 posts

Posted 04 June 2018 - 12:55 PM

சமையல் சந்தேகங்களும், தீர்வுகளும் !!
IMG_20180604_125428.jpg
 
வாழைப்பழம் மிகுந்துவிட்டதா? தூக்கி எறியாம... இதை ட்ரைப் பண்ணுங்க !!
 
🍌 வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதன் மேல் சிறிதளவு எலுமிச்சைச்சாறு தெளித்து, வெயிலில் மூன்று, நான்கு நாட்கள் காய வைத்துக் கொள்ளவும்.
 
🍌 பின், இதை மிட்டாய் போல் வாயில் போட்டுச் சாப்பிடலாம். மேலும் காய வைத்த வாழைப்பழத் துண்டுகளை உடைத்து நெய்யில் வறுத்து கேசரி பாயசம், சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது சேர்த்துக் கொள்ளலாம். 
 
ஆப்பிள் நறுக்கியவுடன் கறுத்து விடுகிறதா?
 
🍎 ஆப்பிள் நறுக்கியவுடன் சிறிது உப்பு கலந்த நீரில் போட்டு எடுத்தால், நீண்ட நேரமானாலும் கறுத்துப் போகாது.
 
குழம்பு, கூட்டு, பொரியல் தயார் செய்யும்போது தேங்காய்க்குப் பதிலாக இதை சேருங்க !!
 
🍝 குழம்பு, கூட்டுக்கு தேங்காய்க்குப் பதிலாக கசகசாவை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துப் போட்டு இறக்கலாம். இப்படி செய்வதால் ருசி அதிகரிக்கும்.
 
🍝 பொரியலுக்குப் பொரி அரிசி அல்லது சிறிது வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்துக் கொள்ளலாம். 
 
 
🍪 பிசைந்த மைதா மாவை அப்பளம் போல் இட்டு, அதனுள் பூரணம் நிரப்பி, மீண்டும் மூடும்போது, அதில் குவியும் அதிகப்படியான மாவை நீக்கிவிட்டால் போளி மிருதுவாக இருக்கும்.
 
சைடிஸ் இல்லாத சப்பாத்தி :
 
🍪 சப்பாத்தி மாவோடு கொஞ்சம் உப்பு, மஞ்சள்பொடி, காரப்பொடி, பெருங்காயத் தூள், சீரகம், கறிவேப்பிலை கலந்து சுட்டால், சைடிஸ் இல்லாத சப்பாத்தி தயார்.
 
கொண்டைக்கடலையை ஊற வைத்து, அவித்தால் சில சமயம் ஒருவிதமான வாடை வருகிறதா?
 
🍲 கொண்டைக்கடலையை நன்றாக கழுவி ஊற வைத்தபின், சுமார் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என்று இரண்டு மூன்று முறை மறுபடியும் கழுவி தண்ணீரை மாற்ற வேண்டும்.
 
🍲 ஞாபகமில்லாமல் தண்ணீரை மாற்றாமல் விட்டு விட்டால், சிறிது கரம் மசாலா சேர்த்துச் செய்தால் சரியாகிவிடும்.

  • HD Version 🌍, SHARPU and ChhotA BheeM like this

🄼🄸🄽🄴


#2 ChhotA BheeM

ChhotA BheeM

    Today is a gift.

  • Senior Member
  • 1,098 posts

Posted 04 June 2018 - 01:08 PM

Valuable information bro..
  • 🅃.🅼.🅸.🅽.🅴.🅁 likes this

#3 🖤TR Thamizh🖤

🖤TR Thamizh🖤
  • Members
  • 4,003 posts

Posted 04 June 2018 - 01:16 PM

:thumbup:  :thumbup:



#4 SHARPU

SHARPU
  • VIP
  • 4,876 posts

Posted 04 June 2018 - 08:09 PM

நல்ல பயனுள்ள விடயங்கள்......... நன்றி
  • 🅃.🅼.🅸.🅽.🅴.🅁 likes this